ஹல்லோ மக்களே ,
வந்தனம் சொல்லியாச்சு .மணியான ரெண்டு கமெண்ட்ஸ் வாங்கியாச்சு . இனி, ஏன் வந்தோம் , என்ன சொல்லப் போறோம்ன்னு தெரியனும்ல. அதுக்குத்தான் இந்த பதிவு. அப்பிடியே நம்ம வாழ்க்கை வரலாற பாத்தா (வரலாறு முக்கியம் அமைச்சரே ) பெரிசா எந்த சாதனைகளும் இல்லாத ,ஒரு சராசரி வாழ்க்கை தான் நம்மளது. ஆனா, நிறைய கொசுவத்திகளால் ஆனது. வலைதள பேரை வச்சு ,நம்ம பூர்வீகம் தெரிஞ்சு இருக்கும் . சோ, தேனியோட ஒட்டு மொத்த கொசுவத்தி டீலர்ஷிப் ,இன்றுமுதல் எனக்குதான்னு சொல்லி , ரிப்பன் வெட்டி , பதிவை தொடங்குறேன்.(என்னா பில்டப்பு ). அஜந்தா கிளாக் kuடுக்குறவங்க மறக்காம குடுத்துட்டு , சாப்பிட போங்க .
வாழ்க்கைல ஒரு பெரிய தத்துவம் இப்ப தான் நல்லா தெரிஞ்சு இருக்கு .அது என்னன்னா , " தன் வினை தன்னைச் சுடும்" .இத்தனை நாளா கமெண்ட் போடாம படிச்ச பலன் இன்னைக்கு தான் தெரியுது. இருந்தாலும் ,ரிப்பன் வெட்டுன துளசி அக்காக்கும் , குத்து விளக்கு ஏத்தி வச்ச சித்ரா அக்காக்கும் , பொன்னாடை போர்த்தி ,நன்றி சொல்வதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன் . நன்றி.
ஏன் இந்த பேரு? பல சந்தர்ப்பங்களில் ,என் மீதான விமர்சனங்கள் இந்த பேரில் தான் முன் வைக்கப் பட்டிருக்கு. ஆரம்ப நாட்களில் இந்த பேரு எரிச்சலை ஏற்படுத்தினாலும் , பின்னாட்களில் பிடித்து விட்டது .சோ , தேனிக்காரி இனிமே அடிக்கடி கொசுவத்தி விக்க வருவா. ஆதரவு குடுங்க. மிதிக்கிறவுங்க வலிக்காம மிதிங்க . போலாம் ரை.....ரை ....ரைட்டு .
Thenikari
ennai thaalaatum ninaivugalai pakira.
திங்கள், 7 பிப்ரவரி, 2011
திங்கள், 17 ஜனவரி, 2011
நானும் ரவுடி தான !
ஒரு வழியா பலவட்டம் ரோசன பண்ணி , நம்மளும் பதிவராகலம்னு முடிவு பண்ணி, ஏதோ நம்மாலான நாலு நல்லது பொல்லது சொல்லி ,( உஸ்ஸ் ....... யப்பா டைப்பு பண்ண தெரியாம தள்ளாடி போயிட்டேன் . இதை எப்புடி எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு? ) ஊரு ஒலகத்துல நானும் ரவுடி தான்னு (தலைப்ப கொண்டு வந்திட்டேனா ?) நில நிறுத்த நானும் ............ இந்தா வந்திட்டேன். இப்ப நீங்க என்ன செய்யனும்னா வழக்கம் போல எல்லாரும் வந்து நாலு மிதி மிதிக்கனும்னு அன்பா பண்பா கேட்டு ............ ஏ ..... வந்தனம் வந்தனமுங்க ,ஏ ... வந்த சனம் குந்தனும் குந்தனுமுங்க ..... ன்னு சொல்லி ............ வரட்டா. போலாம் , ரை...ரைட் .
வியாழன், 25 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)